follow the truth

follow the truth

April, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு

சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு

Published on

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து  பக்கெட்  200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, சீமெந்து  பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.

ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து  பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பக்கட்டின்   விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து  பக்கெட்டுக்களை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதில் பாரிய அசெளகரியங்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக சிமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் நிர்மாணத் துறையில் ஈடுபடுவோரும் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணிலுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கதவுகள் திறப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீதான விசாரணை தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது...

அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது

கடந்த அரசாங்கங்களின் குறுகிய நோக்குடைய நடவடிக்கைகள் காரணமாக அவ்வப்போது VAT வரியை அதிகரிக்க வேண்டியிருந்தது என்று கைத்தொழில் மற்றும்...

எதிர்க்கட்சியின் பலமான குரலாக இருந்ததாலா சாமர சம்பத் கைதானார்? – ரணில்

அரசியல் கைதியாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திஸாநாயக்க குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில்...