follow the truth

follow the truth

September, 7, 2024
Homeஉள்நாடுநிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா

Published on

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை முடியும் வரை தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே நிமல் சிறிபால டி சில்வா தனது இராஜினாமாவை அறிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

விமான போக்குவரத்து அமைச்சு தனியார் நிறுவனமொன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் குறித்து பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைகள் இடம்பெறும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதுவரையில் தனது அமைச்சுப் பதவியை நிமல் சிறிபால டி சில்வா இராஜினாமா செய்வார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளையும் தொடரும்

நாளைய தினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி தபால்மா...

03 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச...

இன்று சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்...