சந்தைகளில் சைக்கிள்களின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதால் , சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் சைக்கிள்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வியாபாரிகள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக சாதாரண சைக்கிள் விலையை 60,000 ஆகவும், கியர் பைக்கின் விலை 77,000 ஆகவும் உயர்ந்துள்ளது.