நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைசார்ந்த வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறுந்தூர போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் பெருமளவு இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.