சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ருவாண்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய உச்சி மாநாட்டில், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது நெருங்கிய நட்பு நாடு என்ற ரீதியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இலங்கைக்கு அவசியம் என ஜி.எல். பீரிஸ், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.