ஒக்சிமீட்டர் ஒன்றின் ஆகக்கூடிய விலை 3000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பாகங்களில் வெவ்வேறு விலைகளில் ஒக்சிமீட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.