தெற்காசிய வலயத்தில் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை உட்பட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் இலங்கையில் 19 வீதத்தினாலும், இந்தியாவில் 17 வீதத்தினாலும், திமோர்-லெசுடேயில் 32 வீதத்தினாலும் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் ஓப்பீட்டளவில் இது 20 வீத வீழ்ச்சி எனவும் கூறப்பட்டுள்ளது.