தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் நாளை (03) தீர்மானிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் நாளை கூடவுள்ள நிலையில், இதன்போது, தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.