தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்புவதானது சாத்தியமற்ற ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் முற்கூட்டியே சென்றிருந்தால் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடிந்திருக்கும் என அவர் குறித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளியிலிருந்து உதவிகளை பெறுவதை தாமதப்படுத்தியது தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.