கொழும்பு மாநகர பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனையுடனான தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இணையவழி கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமிய பாடசாலைகளின் செயற்பாடுகள் குறித்த தீர்மானம் அதிபர்களின் தீர்மானங்களை பொறுத்தே அமையும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.