பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் நாடு ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தெளிவான திட்டம் இல்லாத நாட்டின் போக்கை திருத்தியமைக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர் அதற்கு ஜனாதிபதி கோட்டபாய பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டினார்.
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதும், பொதுமக்களுக்கு விடயங்களை விளக்குவதும், நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதும் இன்றியமையாதது என்றும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.