தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் திரிபானது மிகவும் ஆபத்தானது எனவும், மிக வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது எனவும் விசேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த புதிய வைரஸ் திரிபுகளை உடனடியாக கண்டுப்பிடிக்க முடியுமாயின் அதனை தவிர்க்க முடியும் எனவும் ஆனால் அதனை இனங்காண்பதில் தாமதமாவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னர் அங்கு பரவலடைந்த வைரஸ் திரிபும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் திரிபானது தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கடந்த மே மாதம் கொரோனாவின் மூன்றாவது அலையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.