follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் : வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் : வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு

Published on

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

நீதிபதிகள் சஞ்சீவ மொராயஸ், மஹேன் வீரமன் மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அதாவது ஜனவரி 24 ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் குறித்து ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் 17 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித்...

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவு

ஜப்பானின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்பான பாராளுமன்ற துணை அமைச்சர் அகிகோ இகுயினா (Akiko Ikuina), பிரதமர் கலாநிதி ஹரிணி...

தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய்ச்சில் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர்...