இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்பக்கள் சார்ந்த அழற்சி நோய் Multi system inflammatory syndrome யுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.
கொவிட் தொற்றுக்குள்ளான சிறார்களுக்கு இரண்டு முதல் 6 வாரங்களில் சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நாட்டின் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது 35 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளனர்.
காய்ச்சலால் ஏற்படுவதன் மூலம் இந்த நோய் ஏற்படுவதாகவும் கண்கள் சிவத்தல், நாக்கு சிவத்தல் மற்றும் சருமத்தில் சிவப்பு நிற தழும்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த நோய் மூளை கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தையும் பாதிக்கலாம். இது ஒரு ஆபத்தான சூழ்நிலை என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இதனால், சிறார்களை பெற்றோர் மிகவும் அவதானத்துடன் பார்த்துக்கொள்ளுமாறு கொழும்பு – ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு பொறுப்பான விசேட வைத்தியர் டொக்டர் நலின் கித்துல்வத்த கேட்டுக்கொண்டுள்ளார்.