முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படமாட்டோம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்துதெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் வரப்படவில்லை. இன்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில்
கொரோனா தொற்றை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை எடுக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.