இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு போட்டிகள் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. எஞ்சிய போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றுள்ளது.
இறுதி இருபதுக்கு 20 போட்டி நாளை (11) கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.