நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களால் தமக்கு பயன்படுத்தப்பட்ட பிரபலமான கோஷம் குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகமொன்றுக்கு முன்னதாக வழங்கிய நேர்காணல் ஒன்றில், காகங்களை சிங்கள மொழியில் ‘கபுடாஸ்’ என்று குறிப்பிட்டதை அடுத்து இந்த கோஷம் உருவானது.
காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிங்கள வார்த்தையையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் பெயரையும் இணைத்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவிக்கும் வகையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ, தற்போது பிரபலமாக உள்ள கோஷம் குறித்து நகைச்சுவையாகப் பேசினார்.
‘பசில் பசில் பசில்’ என்று கூறுவது தான் இப்போது எனது ரிங்க் டோன் என்றும் அதுதான் எனது பெயர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.