இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணியில் மிகச்சிறந்த திறமை கொண்ட இளம் வீராங்கனைகள் உள்ளதாலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் ஒளிமயமானதாக காணப்படுவதாலும் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வை முடித்துக்கொள்வதற்கான உகந்த நேரம் இதுவென கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால திட்டம் குறித்து அவர் எதனையும் தெரிவிக்காத போதிலும் கிரிக்கெட்டுடன் தொடர்ந்தும் நெருக்கமாகயிருக்கப்போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆடுகளத்தில் நுழைந்த ஒவ்வொரு தடவையும் இந்திய அணியை வெற்றிபெறவைப்பதற்காக என்னால் முடிந்தளவு சிறப்பாக விளையாடினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மித்தாலி ராஜ் 12 டெஸ்ட்போட்டிகளிலும் 232 ஒருநாள் போட்டிகளிலும் 89 டீ 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஏழு சதங்கள் உட்பட 7805 ஓட்டங்களை அவர் பெற்றுள்ளார்
சர்வதேச அளவில் அதிக ஓட்டங்களை பெற்ற வீராங்கனை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக ஏழு அரைசதம் பெற்ற வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் மித்தாலி என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயதில் தனது முதலாவது போட்டியில் விளையாடிய மித்தாலி ராஜ்- ஸ்கொட்லாந்திற்கு எதிரான அந்த போட்டியில் சதமடித்தார்.
Thank you for all your love & support over the years!
I look forward to my 2nd innings with your blessing and support. pic.twitter.com/OkPUICcU4u— Mithali Raj (@M_Raj03) June 8, 2022