follow the truth

follow the truth

July, 4, 2024
Homeஉள்நாடுமேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற ஜொன்ஸ்டன்!

மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற ஜொன்ஸ்டன்!

Published on

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற ´மைனா கோகம´ மற்றும் ´கோட்டா கோகம´ போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தான் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக மனுதாரர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைச் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யத் தயாராகி வருவதாகவும், இது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தம்மை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஒன்லைன் மூலம் ஆசிரியர் இடமாற்றம், பதவி உயர்வு

எதிர்காலத்தில் இணையவழி முறையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியதாகத் ஜனாதிபதி...

அனைத்து திட்டங்களையும் ஆகஸ்ட் 31க்குள் நிறைவு செய்யுமாறு பணிப்பு

2024 பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் 31-08-2024 ஆம் திகதிக்கு முன் நிறைவு...

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம்

சமூக வலைத்தளங்கள் மூலம் விற்கப்படும் சில மருந்துகளிலும், சருமத்தை வெண்மையாக்க விற்கப்படும் மருந்துகளிலும் தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை...