பேக்கரி உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரியை செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் பேக்கரி பண்டங்களின் விலைகள் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உரிய வற் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பனிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேக்கரி உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சுமார் 2,000 சிறிய அளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.