follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிப்பு

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக அதிகரிப்பு

Published on

அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவாக உயரும் நிலை காணப்படுவதாக அனுராதபுரம் மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

உணவுப் பற்றாக்குறை, நெல் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் நடுத்தர மக்கள் அரிசியை குவிக்கத் தொடங்கியுள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமது தொழில்துறையும் பாரிய ஆபத்தில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நடுத்தர மக்கள் தற்போது கிராமங்களில் இருந்து பத்து முதல் பதினைந்து மூட்டை நெல் எடுக்கின்றனர். சிறிய நெல் ஆலை உரிமையாளர்கள் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்ய நெல் போதுமானதாக இல்லை. குறுகிய காலத்தில் அரிசியின் விலை சுமார் 500 ரூபாய் வரை உயரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சாக்கு, எரிபொருள், கூலி, உதிரி பாகங்கள், போக்குவரத்து செலவு உள்ளிட்ட அரிசியின் மொத்த செலவு உயர்ந்துள்ள சூழலில், ஒரு கிலோ அரிசி உற்பத்திச் செலவு 250 ரூபாவாக உள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ அரிசியின் விலையை மேலும் 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.c

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...