இன்றைய தினம் தமது மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகனான தங்காலை முன்னாள் நகர முதல்வர் ரவிந்து வெதாராச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் பாதுகாப்பற்ற முறையில் கெப்ரக வாகனத்தின் பிற்பகுதியில் குளிர்சாதனபெட்டியை ஏற்றி தெற்கு அதிவேக வீதியில் பயணிப்பதற்கு முயற்சித்திருந்தனர்.
இதனை அவதானித்த போக்குவரத்து பொலிசார் அவர்களை தடுத்துள்ளனர்.
எனினும், சந்தேகநபர்கள் பொலிசாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்தநிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராய்சி குறிப்பிட்டுள்ளார்.