விபத்தொன்றை ஏற்படுத்தி அஜந்த காமினி பெரேரா என்ற பொலிஸ் அதிகாரியின் மரணத்துக்கு காரணமாக அமைந்த வைத்தியர், குறித்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு 10 மில்லியன் ரூபாவை நட்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.