மொபைல் சேவை வழங்குநர்கள் நாளை முதல் மாதாந்திர இணைப்புக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்,
அதே நேரத்தில் ப்ரீ-பெய்டு பயனர்கள் அவர்கள் ரீலோட் செய்யும் தொகைக்கு குறைந்த அளவிலான டேட்டா மற்றும் அழைப்பு நேரங்களைப் பெறுவார்கள்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.