follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபோராட்டங்கள் மீதான தாக்குதல் – மஹிந்த குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

போராட்டங்கள் மீதான தாக்குதல் – மஹிந்த குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Published on

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக இன்று வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை அனைத்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்பின்னர், விசாரணைகளுக்காக மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...