follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகாணாமல் போன மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு!

காணாமல் போன மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு!

Published on

வவுனியா – கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து  16 வயதுடைய சிறுமி  ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக நிலையில் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள்  கண்டெடுக்கப்பட்டன.

குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...