follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுசஷி வீரவங்சவின் பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடல்

சஷி வீரவங்சவின் பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடல்

Published on

போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலையாகியிருந்தார்.

போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், சஷி வீரவங்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவங்ச மேன்முறையீடு செய்திருந்தார்.

தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனையை இன்று (30) வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், சஷி வீரவங்ச இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.

இதன்போது, அவர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. நெல் சந்தைப்படுத்தல்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல்...