பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 21வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் இவ்வாறு பெறப்பட்ட யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்