21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் நாளை(27) விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடைய பங்கேற்புடன் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதன்போது 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
அவ்வாறு கட்சித் தலைவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.