எரிபொருள் விலை அதிகரிப்பால், சோறு பார்சல் மற்றும் கொத்து ரொட்டி விலையை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சோடீஸ், பலகாரங்கள் மற்றும் தேநீர் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என மேற்படி சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.