- பந்துல குணவர்தன – போக்குவரத்து நெடுஞ்சாலைகள்
- பந்துல குணவர்தன – ஊடகத்துறை அமைச்சர்
- கெஹெலிய ரம்புக்வெல்ல – நீர்வளங்கள் அமைச்சர்
- மகிந்த அமரவீர – விவசாய, வனஜீவ, வனவள பாதுகாப்பு அமைச்சர்
- ரமேஸ் பத்திரன – கைத்தொழில்துறை அமைச்சர்
- விதுர விக்ரமநாயக்க – புத்தசாசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர்
- அஹமட் நசீர் – சுற்றுச்சூழல் அமைச்சர்
- அநுருத்த ரணசிங்க ஆரச்சிகே ரொஷான் – நீர்பாசனத்துறை அமைச்சர்
- அநுருத்த ரணசிங்க ஆரச்சிகே ரொஷான் -விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர்
- டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
இதன்படி எட்டு அமைச்சர்களுக்கு பத்து அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவர்களில் கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமேஸ் பத்திரன ஆகியோர் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில், இன்று மேலும் சில அமைச்சுக்கள் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்ற பின்னர்,
பொது நிர்வாக அமைச்சராக தினேஸ் குணவர்தன,
வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
நகர அபிவிருத்தி அமைச்சராக பிரசன்ன குணவர்தன,
மின்சக்தி, எரிசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர, ஆகியோர் முதன்முறையாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதன்பின்னர் 9 அமைச்சர்கள் பதவியேற்றிருந்த நிலையில், இன்று மேலும் ஆறு பேருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 19 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர்.