சதொச மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் சிவப்பு சீனியை 130 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.