எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்கான நேரங்களை பொதுமக்களுக்கு வழங்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் தாங்கிய லொறிகள் புறப்பட்டவுடன் மக்களுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அறிவிப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது எரிபொருளுக்காக பல மணிநேரங்களாக மக்கள் காத்திருப்பதாகவும், இதனை தவிர்ப்பதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.