சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்களை எடுத்திருந்தது.
தினேஷ் சந்திமால் 39 ஓட்டங்களுடனும், நிரோஷன் திக்வெல்ல 61 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இருவரும் 7 ஆவது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி சார்பாக அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிட்டகாங் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் 397 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 465 ஓட்டங்களை எடுத்தது.
முதல் டெஸ்ட் சமநிலையில் நிறைவு
Published on