எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் தினங்களில் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்படும் எனவும் 60 வயதை பூர்த்தி செய்த சகல நபர்கள் தொடர்பிலும் மாவட்ட ரீதியில் தகவல்களை சேகரித்து தரவு அறிக்கையொன்றை மாவட்ட செயலாளர்கள் ஊடாக விரைவில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சர்வதேச மட்டத்தில் பாராட்டப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் தினங்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.