follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுஹரின்-மனுஷவுக்குப் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர்

ஹரின்-மனுஷவுக்குப் பதில் கடிதம் அனுப்பிய பிரதமர்

Published on

பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சி எம்.பி.க்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சமர்ப்பித்த கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.

பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்தால் புதிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவை வழங்குவோம் என எம்.பி.க்கள் பல விடயங்கள் தொடர்பில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்களின் கடிதத்துக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின்  கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா தொடர்பில், பெரும்பான்மை கருத்துடன் தான் உடன்படுவதாகவும், ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான பிரேரணையை ஆராய்ந்து சமர்பிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பில் அமைதியான முறையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸார் சுயாதீன விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது தொடர்பில் தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள், ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்த பிரதமர், தேவைப்பட்டால் வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்தார்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான வழக்கு தொடர்பான உண்மைகளை உச்ச நீதிமன்றில் சமர்பிக்க விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட்டவுடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதாகவும் பிரதமர் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான்...

இரவு நேரங்களில் சீகிரியா திறக்கப்படமாட்டாது

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியாவை இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பது குறித்த செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார...

ஒரு மூடை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி...