ஒருமைப்பாடு, கருணை, தூய்மையான நோக்கங்கள் போன்ற சிறந்த பண்புகளின் துணையுடன் மட்டுமே தற்போதைய சவால்களை கடந்து முன்னேறலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையும் ஏனைய உலக நாடுகளும் அமைதியின்மைக்கு மத்தியில் பயணிக்கும் இந்த தருணத்தில் புத்த பகவானின் போதனைகள் எம்மை வழிநடத்துவதாக அமையும்.
2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்த பகவான் போதித்த கருணை, சகிப்புத்தன்மை, ஏனையோரை மதித்தல் போன்றவை இன்றளவும் இன்றியமையாததாக நிலைத்து நிற்கின்றன.
1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்ட தீர்மானம் ஊடாக விசாகப்பூரணை தினம் சர்வதேச அனுஷ்டிப்பு தினமாக அறிவிக்கப்பட்டது.
இன்று ஐக்கிய நாடுகள் சபை இலங்கையுடன் நிற்கின்றது.
இலங்கை மக்களின் மீண்டெழும் திறனை கண்டு நாம் வியக்கிறோம்.
வன்முறையற்ற அமைதி வழியில் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீளும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஒருமைப்பாடு, கருணை, தூய்மையான நோக்கங்கள் போன்ற சிறந்த பண்புகளின் துணையுடன் மட்டுமே தற்போதைய சவால்களை கடந்து முன்னேறலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
Wishing everyone in #SriLanka and around the world a peaceful #Vesak! Let us today and every day live with the compassion, respect and understanding taught by the Buddha. @UNSriLanka Vesak Day Message in සිංහල, தமிழ் & English 👉 https://t.co/Rbp85Wjn7J pic.twitter.com/uDQJwh0kbP
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) May 15, 2022