தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விதி 110-இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்
இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும்.
முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.
முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் ரூ. 231 கோடி செலவில் கட்டித்தரப்படும்.
அகதிகளின் குழந்தைகள் கல்விக்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாழ்வாதார மேம்பாட்டு நிதியாக ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தொழிற்கல்வி படித்து வரும் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் என உள்ளடக்கிய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.