காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காபுலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இரண்டு பாரிய குண்டுத் தாக்குல்களில் 13 அமெரிக்க படையினரும், ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 60 பேரும் கொல்லப்பட்டதுடன், 140 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
காபூல் விமான நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் கூட்டத்திற்கும் அவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காபுலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட இரண்டு பாரிய குண்டுத் தாக்குல்களில் 13 அமெரிக்க படையினரும், ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் 60 பேரும் கொல்லப்பட்டதுடன், 140 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.