நுரைச்சோலை அனல் மின் நிலையம் மீள இயங்கும் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஓட்டோ டீசல் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோலை சந்தைக்கு விநியோகிப்பதாக அமைச்சு கூறியுள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோலே பெரும்பாலான சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
40,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் மற்றும் மசகு எண்ணெயை கொண்ட கப்பல்களிலிருந்து எண்ணெயை இறக்கும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன.