follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபுலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வௌியான அறிவிப்பு

புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் குறித்து வௌியான அறிவிப்பு

Published on

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன் இம்முறை பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட நிலையங்களிலும் இடம்பெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...