நேற்றைய (5) தினம் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலக தீர்மானித்துள்ளார்.
முன்னதாக பிரதி சபாநாயகராக பதவி வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் ஜனாதிபதியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்
எனினும் ஜனாதிபதி அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியுடன் தான் பதவியில் இருந்து விலகுவதாக சபையில் அறிவித்தார்.
அதற்கமைய, அவர் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்த பிரதி சபாநாயகர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிப்பதற்காக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதற்கமைய 148 வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார்.
இந்நிலையில் தான் மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.