follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுவேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்தமுடியாத நிலையில் உள்ள அரசாங்கம் - ரணில்

வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்தமுடியாத நிலையில் உள்ள அரசாங்கம் – ரணில்

Published on

நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் பாராளுமன்றில் கருத்துரைத்தபோதே ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்தார்.

பாராளுமன்றில் இன்று எதிர்கட்சிகளின் சார்பில் இரண்டு பேர் பிரதி சபாநாயகர் பதவிக்கான வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டனர்.

அரசாங்க கட்சியினால் வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்த முடியவில்லை.

அரசாங்கம் ஒருவரை வேட்பாளராக முன்னிலைப்படுத்தியிருந்தால், இன்று அதன் நிலையை கண்டிருக்கமுடியும்.

இந்தநிலையில் நாட்டு மக்கள் ராஜபக்சர்களை மாத்திரமே போகச்சொல்கிறது.

முழுமையை பொதுபெரமுன கட்சியை போகச்சொல்லவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பிரச்சினை தீவிரமாகியுள்ள நிலையில், இந்த வாரமும் நாடாளுமன்றம் பிரச்சினைக்கு தீர்வைக் காணவில்லை.

எனவே அடுத்த வாரமாவது கூடி, முடியுமான தீர்மானத்தை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கு சபாநாயகர் முழுமையான முயற்சியை எடுக்கவேண்டும். இல்லையேல், பாராளுமன்றில் கௌரவத்தை பாதுகாக்கமுடியாது.

இந்தநிலையில் பொதுமக்கள் இறுதியில் நாடாளுமன்றத்துக்கே வந்து போராட்டம் செய்வர் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்புக்கு 12 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல்...

சீன ஜனாதிபதி – அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கு...