50 வயதிற்கு மேற்பட்டவர்களில், சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை விடவும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களிடையே ஏற்படும் மரணம், 8.1 மடங்கு அதிகம் என்று என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஃபைசர், அஸ்ட்ரா-செனெகா மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இதுவரை மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.
நான்கு தடுப்பூசிகளின் வெற்றியை ஒப்பிடுவதற்கான முதல் ஆய்வை மேற்கோள் காட்டி, அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார்.