குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அத்தியாவசியமில்லாத சேவைகளுக்காக இன்று தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் நேற்று (03) வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோளாறு திருத்தம் செய்யப்பட்டு, சேவைகள் வழமைபோல இன்று இடம்பெறுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.