போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கையர்கள் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில பகுதியை சேர்ந்த குறித்த ஐவரினதும் விசாக்கள் மீது எழுந்த சந்தேகம் காரணமாக முன்னெடுக்கப்பட்ட சோதனையில் அவை போலியாக தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் தாம் இத்தாலிக்கு செல்ல திட்டமிட்டதாக குறித்த ஐவரும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் உள்ள தரகர்கள் ஊடாக போலி விசாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளமை, குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த ஐவரும் விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் .