follow the truth

follow the truth

January, 3, 2025
Homeஉள்நாடுதலவாக்கலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலுக்கு தனி மனித நடைபவனி

தலவாக்கலையில் இருந்து கொழும்பு காலிமுகத்திடலுக்கு தனி மனித நடைபவனி

Published on

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் இன்றைய தினம் (03.05.2022) காலை 9.30 மணிக்கு தலவாக்கலை நகரில் இருந்து சசிகுமார் என்ற தனி மனிதர் ஒருவர் நடை பவனியாக தனது போராட்டத்தை ஆரம்பித்தார்.

காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்துடன் இன்னும் மூன்று தினங்களில் இணைந்து கொள்ளும் நோக்குடன் அவர் இந்த தனி மனித நடைபவனி போராட்டத்தை ஆரம்ப்பித்துள்ளார்.

இன்று காலை தலவாக்கலை நகர மத்தியில் ஆரம்பித்த இந்த போராட்டத்தில் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் மற்றும் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தற்போதைய உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான தாளமுத்து சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதனைதொடர்ந்து நடைபவனியாக சென்ற அவரை கொட்டகலையில் நகர வர்த்தகர்கள் சார்பில் வர்த்தக சங்க தலைவர் புஷ்பா விஷ்வநாதன் கொட்டகலை நகரில் வரவேற்பு செய்தார்.

அவருடன் நகர மக்களும் உடனிருந்தனர். மாலை அணிவித்து, ஆசி வழங்கி அவரின் போராட்டம் வெற்றிப்பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி...

கொழும்பு வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல்

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்...