சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கான யோசனை தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அங்கம் வகிக்கும் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
அனைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய சகல கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.