பியகம, மல்வான யட்டியான பிரதேச வீடொன்றில் இருந்து அழுக்கு நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட குழியில் மயங்கி விழுந்து இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு புதிய வீடு கட்டப்படும் இடத்தில் இருந்து அசுத்தமான நீரை வெளியேற்றுவதற்காக குழி வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
குழியில் பொருத்தப்பட்டிருந்த மரத் தாங்கிகளை அகற்ற முற்பட்ட வேளையில் இருவர் குழியில் மயங்கி விழுந்துள்ளனர்.
பின்னர் அவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.