அரசாங்கத்தினால் 60 வகையான மருந்து பொருட்களின் விலையை 40 சதவீதத்தினால் அதிகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் அஜித் திலகரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை மற்றும் மருந்தக நிறுவனங்களின் ஊடாக தற்போது மருந்து பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் வெகுவாக பாதிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனியார் மருந்தகங்களில் சிறுவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.